Thursday, April 7, 2011

மலர்களின் மணம் வீசும் அணைக்கட்டு தொகுதி

புகழ்பெற்ற பொற்கோயில் அமைந்துள்ள அரியூர் ஊராட்சி அணைக்கட்டு தொகுதியில் வருகிறது. மலர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோர் இங்கு அதிகம். இது விவசாயம் நிறைந்த தொகுதி. விவசாய நிலங்களில் அதிகம் உற்பத்தியாகும் மல்லிகை, ரோஜா மலர்கள் சென்னை, பெங்களூருக்கு ஏற்றுமதியாகிறது. தொகுதியில் மலர்களின் மணம் எப்போதும் வீசிக் கொண்டே இருக்கும் என்று சொல்லும் அளவிற்கு பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் அபூர்வ மூலிகைகளும் அணைக்கட்டு மலைகளில் காணப்படுகின்றன.

அணைக்கட்டு தொகுதி குறித்து விரிவாக அறிய இங்கே சொடுக்கவும்.

அணைக்கட்டு தொகுதி பா.ம.க வேட்பாளராக போட்டியிடுகிறார் எம். கலையரசு. அவருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்.

அணைக்கட்டு தொகுதி குறித்து விரிவாக அறிய இங்கே சொடுக்கவும்.

நெய்வேலி - கடலூர் மாவட்டத்தின் சிறிய தொகுதி

கடலூர் மாவட்டத்திலேயே குறைந்த வாக்காளர்களை கொண்ட சிறிய தொகுதியாக நெய்வேலி கருதப்படுகிறது. இது கடலூர் மாவட்டத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். தமிழகத்தின் முதன்மையான அனல்மின் நிலையம் மற்றும் நிலக்கரி சுரங்கம் இங்கு அமைந்துள்ளது.

நெய்வேலி தொகுதி குறித்து விரிவாக அறிய இங்கே சொடுக்கவும்.


பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருமுறை வெற்றிபெற்று சாதனைகள் பல படைத்தவர் தி. வேல்முருகன். சட்டமன்ற தொகுதி சீரமைப்பால் இப்போது அவரது தொகுதி நெய்வேலி சட்டமன்ற தொகுதி ஆகியுள்ளது

நெய்வேலி தொகுதி பா.ம.க வேட்பாளராக போட்டியிடுகிறார் தி. வேல்முருகன். அவருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்.

நெய்வேலி தொகுதி குறித்து விரிவாக அறிய இங்கே சொடுக்கவும்.

"ஏழைகளின் ஊட்டி'' ஜோலார்பேட்டை தொகுதி


ஜோலார்பேட்டை வேலூர் மாவட்டத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.  இந்த தொகுதியில் உள்ள நாட்டறம்பள்ளி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஆகும். இங்கு நூற்றாண்டு விழா கொண்டாடிய ராமகிருஷ்ணமடம் உள்ளது. மடத்தின் அரிய சமூக சேவையை பாராட்டி தேச தந்தை மகாத்மா காந்தியடிகள் மடத்துக்கு நேரில் வந்து சில மணி நேரம் தங்கிய பெருமை பெற்ற இடம்.

ஜோலார்பேட்டை தொகுதி குறித்து விரிவாக அறிய இங்கே சொடுக்கவும்.

கொத்தூர், பச்சூர் பகுதியில் விளையும் சீத்தாபழம் அளவிலும், எடையிலும் பெரியவை. நாட்டறம் பள்ளி பகுதியில் உற்பத்தியாகும் சீத்தா பழங்கள் நாட்டறம் பள்ளி பழங்கள் என்ற பெயரிலேயே மும்பை நகரில் விற்பனை செய்யப்படுவது சிறப்பு.
"ஏழைகளின் ஊட்டி'' என்று அழைக்கப்படும் ஏலகிரிமலை தமிழக அரசு திட்டங்களால் சுற்றுலா தலமாக வளர்ச்சி பெற்று அனைவரும் கவனத்தையும் கவர்ந்துள்ளது. 1015 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது, ஏலகிரி மலை. 

ஜோலார்பேட்டை தொகுதி பா.ம.க வேட்பாளராக போட்டியிடுகிறார்கோ.பொன்னுசாமி அவருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்.

ஜோலார்பேட்டை தொகுதி குறித்து விரிவாக அறிய இங்கே சொடுக்கவும்.

ஆற்காடு - வரலாற்று சிறப்புமிக்க தொகுதி


வேலூர் மாவட்டத்தில் வரலாற்று பின்னனியுடனும், அரசியல் முக்கியத்துவமும் வாய்ந்ததுஆற்காடு தொகுதி. ஆற்காடு நவாப்புகள் 1690 முதல் 1801 வரை தென்னிந்திய கருநாடக பகுதிகளை ஆண்ட மன்னர்கள் ஆவர். இவர்கள் தலைநகரம் ஆற்காடு ஆகும். இவர்கள் ஆட்சியின் பொழுதுதான் ஆங்கிலேயேர்கள் மொகலாய ஆட்சியாளர்கள் உதவியுடன் இந்தியாவில் காலூன்ற ஆரம்பித்தனர்.

ஆற்காடு தொகுதி குறித்து விரிவாக அறிய இங்கே சொடுக்கவும்.

பழங்காலத்தில் ஆற்காட்டை சுற்றி புதுப்பாடி, வேப்பூர், விஷாரம், காரை, குடிமல்லூர், வன்னிவேடு ஆகிய 6 பகுதிகள் காடுகளாக இருந்ததாகவும் அந்த காடுகளில் பரத்வாஜமுனிவர், வசிஸ்டேஷ்வரர், விசுவாமித்திரர், கவுதமர், அகத்தியர், அத்திரி மகரிஷி மற்றும் முனிவர்கள் தவம் செய்ததாகவும் அதன் காரணமாக ஆறு காடுகள் என அழைக்கப்பட்டதாகவும், பின்னர்அது நாளடைவில் மருவி ஆற்காடு என அழைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் முன்பு ஆற்காடும் அடங்கியிருந்தது குறிப்பிடத் தக்கது. பின்னர் 1956-ம் வருடத்தில் ஆந்திர- தமிழக எல்லைகள் பிரிக்கப்பட்ட போது சித்தூர் ஆந்திர மாநிலத்திலும், ஆற்காடு தமிழ்நாட்டிலும் இணைக்கப்பட்டுள்ளது.

ஆற்காடு தொகுதி பா.ம.க வேட்பாளராக போட்டியிடுகிறார் கீ.லோ. இளவழகன். அவருக்குமாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்.

புவனகிரி: மகான்கள் அவதரித்த தொகுதி

புவனகிரி கடலூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இந்தியாவின் மிக முதன்மையான இரண்டு ஆன்மீக அடியார்கள் அவதரித்த தொகுதி இதுவாகும்.

புவனகிரி தொகுதி குறித்து விரிவாக அறிய இங்கே சொடுக்கவும்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று உள்ளம் உருகிய அருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்க அடிகளார் அவதரித்தமருதூர் கிராமம் இங்குதான் உள்ளது. ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் அவதரித்த புவனகிரியும் இங்குதான் அமைந்துள்ளது.

புவனகிரி தொகுதி பா.ம.க வேட்பாளராக போட்டியிடுகிறார் த. அறிவுச்செல்வன். அவருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்.

புவனகிரி தொகுதி குறித்து விரிவாக அறிய இங்கே சொடுக்கவும்.

Wednesday, April 6, 2011

பா.ம.க தேர்தல் அறிக்கை

PMK Menifesto 2011

Tuesday, April 5, 2011

தி. வேல்முருகன் சாதனைகள்.

பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் தி. வேல்முருகன் சாதனைகள்.

பண்ரூட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருமுறை வெற்றிபெற்று சாதனைகள் பல படைத்தவர் தி. வேல்முருகன். சட்டமன்ற தொகுதி சீரமைப்பால் இப்போது அவரது தொகுதி நெய்வேலி சட்டமன்ற தொகுதி ஆகியுள்ளது.

தி. வேல்முருகன் சட்டமன்ற உறுப்பினராக 2001- 2006 மற்றும் 2006- 2011 இல் படைத்த சாதனைகளை இங்கே காணலாம்:
Velmurugan MLA Achievements