Thursday, April 7, 2011

ஆற்காடு - வரலாற்று சிறப்புமிக்க தொகுதி


வேலூர் மாவட்டத்தில் வரலாற்று பின்னனியுடனும், அரசியல் முக்கியத்துவமும் வாய்ந்ததுஆற்காடு தொகுதி. ஆற்காடு நவாப்புகள் 1690 முதல் 1801 வரை தென்னிந்திய கருநாடக பகுதிகளை ஆண்ட மன்னர்கள் ஆவர். இவர்கள் தலைநகரம் ஆற்காடு ஆகும். இவர்கள் ஆட்சியின் பொழுதுதான் ஆங்கிலேயேர்கள் மொகலாய ஆட்சியாளர்கள் உதவியுடன் இந்தியாவில் காலூன்ற ஆரம்பித்தனர்.

ஆற்காடு தொகுதி குறித்து விரிவாக அறிய இங்கே சொடுக்கவும்.

பழங்காலத்தில் ஆற்காட்டை சுற்றி புதுப்பாடி, வேப்பூர், விஷாரம், காரை, குடிமல்லூர், வன்னிவேடு ஆகிய 6 பகுதிகள் காடுகளாக இருந்ததாகவும் அந்த காடுகளில் பரத்வாஜமுனிவர், வசிஸ்டேஷ்வரர், விசுவாமித்திரர், கவுதமர், அகத்தியர், அத்திரி மகரிஷி மற்றும் முனிவர்கள் தவம் செய்ததாகவும் அதன் காரணமாக ஆறு காடுகள் என அழைக்கப்பட்டதாகவும், பின்னர்அது நாளடைவில் மருவி ஆற்காடு என அழைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் முன்பு ஆற்காடும் அடங்கியிருந்தது குறிப்பிடத் தக்கது. பின்னர் 1956-ம் வருடத்தில் ஆந்திர- தமிழக எல்லைகள் பிரிக்கப்பட்ட போது சித்தூர் ஆந்திர மாநிலத்திலும், ஆற்காடு தமிழ்நாட்டிலும் இணைக்கப்பட்டுள்ளது.

ஆற்காடு தொகுதி பா.ம.க வேட்பாளராக போட்டியிடுகிறார் கீ.லோ. இளவழகன். அவருக்குமாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்.

No comments: